ரொறன்ரோ களியாட்ட விடுதி துப்பாக்கிச் சூடு: இருவர் மீது 11 குற்றச்சாட்டு!

ரொறன்ரோ களியாட்ட விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 11 குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Cobra களியாட்ட விடுதியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய் தர்க்கத்தை அடுத்து குழுவின் நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதில் ஒருவர் காயமடைந்தார்.

இந்நிலையில் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

இதில் 28 வயதுடைய மொகமட் சலீம் மீது கொலை, துப்பாக்கியால் உயிருக்கு ஆபத்து விளைவித்தமை மற்றும் அங்கீகரிக்கப்படாத துப்பாக்கியை உடைமையில் வைத்திருந்தது என 9 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் ரொறன்ரோவை சேர்ந்த 25 வயதுடைய அப்தீலி அப்தி என்ற நபர் மீது தாக்குதல் மற்றும் ஆபத்தான துப்பாக்கி பிரயோகம் என இரு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ரொறன்ரோ பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !