ருமேனியா: கொரோனா வைத்திய சாலையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு
ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பின்னர் அதை ஒட்டிய அறைக்கு தீ பரவியது என்றும் இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மருத்துவர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கிழக்கு ருமேனிய நகரமான ஐயாசியில் உள்ள கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைக்கு எஞ்சியிருக்கும் ஆறு நோயாளிகள் மாற்றப்படுவார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.