ரீயூனியன் தீவில் இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
ரீயூனியன் தீவில் இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
பிரான்சின் காலனித்துவ நாடான ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி தொடர்பாக , கடந்த வியாழக்கிழமை மாலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
104 அகதிகளின் வதிவிட அனுமதிக்கான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவற்றில் 83 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 21பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.