ரிஷாட்,ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு கோரிக்கை
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
அது குறித்த மனு ஒன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில், கையளித்துள்ளதாக, சிங்கள ராவய அமைப்பின் பொது செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.