ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: டோமினிக் தீயிம் அதிர்ச்சி தோல்வி

ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர் தற்போது பிரேஸிலில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

செம் மண் தரையில் நடைபெறும் இத்தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், இதற்கு முன்னோட்டமாக செம் மண் தரையில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் விளையாட வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சரி வாருங்கள் இத்தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியொன்றின் முடிவினை பார்க்கலாம்,

ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியொன்றில் ஒஸ்திரியாவின் டோமினிக் தீயிம்மும் , செர்பியாவின் லாஸ்லோ டிரேவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களின் உச்சக்கட்ட கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை லாஸ்லோ டிரே, 6-3 என கைப்பற்றினார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும், சிறப்பாக விளையாடிய லாஸ்லோ டிரே, 6-3 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய லாஸ்லோ டிரே, நாளை நடைபெறும் இரண்டாவது சுற்று போட்டியில், ஜப்பானின் டெரா டேனியலை எதிர்கொள்ளவுள்ளார்.

முன்னணி வீரரான டோமினிக் தீயிம், இவ்வாறு தரநிலை வீரரிடம் மண்டியிட்டிருப்பது, அவரது இரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !