ரிச்மண்ட் ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!

ரிச்மண்ட் ஹில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பர்னவுட் டிரைவ் பகுதிக்கு இரவு 9:30 மணியளவில் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இதன் போது குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சுருதி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் உயிரிழந்தவர் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஸாயீல் ரபீபூர் என பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டனர்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கருப்புநிற SUV வாகனத்தை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு இச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !