Main Menu

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத படுகாயத்துடன் மீட்கப்பட்டு குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

பின்னர், மேற்சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் வருண் சிங் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன்மூலம் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.