ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், இன்று (திங்கட்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது ராஜீவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தி, மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஆகியோரும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் ஆறாவது பிரதமரான ராஜீவ்காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதல்தாரியினால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !