ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலை வலியுறுத்திய வைகோ கைது!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

பேரறிவாளன் உள்ளிட் 7 பேரை விடுதலை செய்ய ஆளுனர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானதும், அவை கண்டிக்கத்தக்கது என்றும். உடனே அவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகை அருகே சின்னமலைப் பகுதியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்ததைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களின் தலைவர்கள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.

27 ஆண்டுகள் சிறையில் இருக்கக் கூடியவர்களை விடுவிக்க ஆளுநர் தொடர்ந்தும் மறுத்து வருவதாகவும், கைதிகளின் விடுதலைக்கு மத்திய மாநில அரைசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் வைகோ மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலஸஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !