ராஜஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவு!
ராஜஸ்தானில் கோடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான விசாரணையில், இந்த மருத்துவமனையில் 2014ல் பிறந்த 1198 குழந்தைகளும், இந்தாண்டு டிசம்பரில் மட்டும் 77 குழந்தைகள் இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 10 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
போதியளவான ஆக்சிஜன் வசதி இல்லாததே குழந்தைகள் உயிரிழந்தமைக்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பகிரவும்...