Main Menu

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை

தனுசு: தனுசு ராசிநண்பர்களுக்கு இது வரை 9 ல் இருந்த ராகு பகவான் ஆயுள் வாழ்நாள் சிந்தனை புதிய ஆய்வாற்றல் துக்கம் மர்மம் ஆகிய காரக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பாவ கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்க்கு வரும் பொழுது அந்த காரகபலனை காரகநாஸ்தி செய்து கெடுதலை கெடுத்து நன்மையை செய்வார்கள் என்ற அடிப்படையிலும் உங்கள் ராசிநாதன் குருபகவான் ஆவதாலும் தங்கள் மதிப்பு மரியாதையை யாராலும் கெடுக்க முடியாது. தங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மாறும். தோல்விகள் காரியத் தடைகள் அகலும்.

தொழில் உத்தியோகத்தில் டென்சனை கொடுத்தாலும் பெரிய பாதிப்பு வராது. குடும்பத்தில் அவ்வப்பொழது பிரச்சனைகள் வந்தாலும் உடனே சரியாகி விடும்.. கடன்கள் அடைபடும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட புத்திரபாக்கியம் திருமணம் தடைகள் நீங்கி சுபகாரியம் நடக்கும். விரய சனி ஓரு கடனை அடைத்தால் இன்னொரு கடன் வாங்கச் செய்யும். 2 ல் கேது 8 ல் ராகு என்றாலே மனதில் ஓரு வித தயக்கம் பயம் எதிலும் திருப்தி இல்லாத சூழ்நிலையை ஏற்படும் கேது 2 ல் வந்தாலும் வருமானம் வந்தாலும் சேமிப்பு இருக்காது சிலர் இடமாற்றம் தொழில் மாற்றம் உண்டாகும். புதுமுயற்சிகள் பல தடைகளை கொடுத்து இறுதியில் வெற்றி கிடைக்கும். நல்லதும் கெட்டதும் மாறிமாறி நடக்கும்.!

மகரம்: மகர ராசி நண்பர்களுக்கு ராகு பகவான் ஜென்ம ராசிக்கு ஏழாம் பாவத்துக்கு மாறுகிறார் போன ராகுகேது பெயர்ச்சியை விட இந்த பெயர்ச்சி நல்ல மாற்றம் தரும். இன்னல்கள் விலகும், இடமாற்றம் ஏற்படும், குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு நீங்கும், தொழில் நிலை மேம்படும், வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெறும்.

உத்தியோகத்தில் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கும். டிசம்பர் மாதம் வரை சற்றே குழப்பமும் புது முயற்சிகள் தடைபடும் காரணம் கேதுக்கு சனியின் பார்வையால். சனி பெயர்ச்சி ஆனதும் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். கூட்டு தொழிலில் நண்பர்களால் நன்மை ஏற்படும்.10 ல் குரு பெயர்ச்சி நன்மை செய்யும் குடும்பத்தில் சுபகாரியம் திருமணம் நடக்கும் புதிய வீடு மனை புதிய பதவிகள் புதிய உறவுகள் வந்து சேரும். ஏழரை சனி வருவதால் பயப்பட வேண்டாம் 23 வயதுக்கு முன் வந்தால் மங்கு சனி 45 வயதுக்குள் வந்தால் பொங்கு சனி 65 வயதை ஓட்டி வந்தால் மங்கு சனி. சனி பகவான். ரிஷபம் துலாம் மகரம் கும்பராசி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு தர மாட்டார்.

கும்பம்: கும்பம் ராசி நண்பர்களுக்கு ராகு ஆறாமிடத்திற்கும் கேது பன்னிரெண்டாமிடத்திற்கும் வருகிறார்கள் பொதுவாக சனி பகவானின் ராசியில் சஞ்சரிக்கும் ராகு கேதுகள் பெரும் பாதிப்பை தரமாட்டார்கள். உங்களுக்கு உலக உண்மைகள் புரியும், உயர்வுகள் தெரியும் காலகட்டம் வந்து விட்டது. பத்தாம் பாவத்துக்கு பாக்கிய ஸ்தானமான 6 ஆம் வீட்டில் ராகு வருவதால் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.புது முயற்சிகள் கை கூடும் இது வரை குழப்பத்தில் இருந்த தாங்கள் தெளிவாக செயல்படுவீர்கள் தொழில் உத்தியோகத்தில் மிகப் பெரும் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் உண்டு சிலருக்கு நீண்ட நாள் இருந்து வந்த சட்ட சிக்கல் தீரும். கோர்ட்டு வழக்குகள் சாதகமாகும், புது முயற்சிகள் கை கூடும். வீடு வாங்குவதற்கும் மாற்றுவதற்கும் நல்ல நேரம் உண்டாகிவிட்டது. கடன்கள் அடைபடும். கேது 12 ல் இருப்பது கால்வலி உண்டாகி கொஞ்சம் காலம் காலை தாங்கி நடக்க வைக்கும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும்.

மீனம்: மீனம் ராசி நண்பர்களுக்கு குருவின் ஆட்சி வீட்டில் பிறந்த தாங்களுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பையும் நல்லோர் நட்புடன் விளங்கும் தாங்களுக்கு ராகு 5 ஆம் பாவத்ததிற்கும் கேது 11 பாவத்துக்கும் மாறுகிறார்கள். கடந்த ஆண்டில் 12 ல் இருந்த கேது கொஞ்ச காலம் காலை முடக்கி வைத்திருந்தார். அதிக அளவில் புனித யாத்திரைகள் சென்றிருப்பீர்கள். ராகு கேது பெயர்ச்சி நல்ல பலனை கொடுக்கும். எடுக்கும் காரியங்களை செவ்வனே செய்து முடிப்பீர்கள். புது முயற்சிகள் கை கூடும் தொழில் வகையில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும், புத்திரர் வகையில் பெருமை படத்தக்க சம்பவங்கள் நடைபெறும். 11 ல் இருக்கும் கேதுவால் போட்டி பொறாமை எதிரிகள் கடன்கள் எல்லாம் நிவர்த்தி ஆகும். சுபகாரியம் திருமண முயற்ச்சிகள் கை கூடும் இதுவரை இருந்த சோகம் எல்லாம் யோகமாக மாறும். யாரையும் நீங்கள் ஏமாற்ற மாட்டீர்கள். உங்களை ஏமாற்றியவர்கள் உங்களை சரணடையும் காலம் ஏற்பட்டுவிட்டது. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அயல் தேசத்தில் நல்ல வேலை அமையும் மொத்தத்தில் ராகு கேதுவால் நன்மைகளை அதிகம் எதிர்பார்க்கலாம்.

பகிரவும்...