Main Menu

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி மாதம் 11ஆம் தேதி ஜூலை 27ம் தேதி ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

ஜாதக பலன்கள் அறிவதற்கு திருக்கணிதமுறை பெரும்பாலான ஜோதிடர்களால் பின்பற்றப்படுகிறது. திருக்கோயில்களில் விஷேசங்கள் வாக்கியப்பஞ்சாங்கத்தை பின்பற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்பக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்கிறோம். ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது பலங்களை வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம்பெறும். இராசி மண்டலத்தின் வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும் வழங்கப்படுகின்றன. மேற்கத்திய ஜோதிடத்தில் இராகு “டிராகன்ஸ் ஹெட்” என்றும், கேது “டிராகன்ஸ் டெயில்” என்றும் குறிப்பிடப்படுகின்றன.

ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும் பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை தாக்கம் அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் தாக்கம் ஏற்படும். மனிதத் தலையும் பாம்பு உடலையும் கொண்ட இராகு கருமை நிறத்தவர், நீண்டு நெடியவர். குரூரமான குணம் உடையவர். அற்புதமான செயல்களை உருவாக்கிக் காட்டக் கூடிய ஆற்றல் மிக்கவர் இராகு ஆவார். திருநாகேஸ்வரத்தில் இராகு தனது இரு தேவியர்களான நாகவல்லி, நாக்கன்னி சமேதராய், உள்பிரகாரத்தில் கோவில் கொண்டு அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார். இத் திருத்தலமே இராகு பரிகாரத்திற்கு முதலிடமாகவும், சிறந்த இடமாகவும் கருதப்படுகிறது.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான இராகு – கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே இராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள். மத, தெய்வ வழிபாடுகள் அனைத்தும் நம்பிக்கையின் பாற்பட்டவை. இந்த நம்பிக்கைகள்தான் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தவும், வளப்படுத்தவும் உதவுவன ஆகும்.

மனிதனின் துன்பத்தையும், துயரங்களையும், கஷ்டங்களையும் இந்த நன்நம்பிக்கைகள்தான் களைகின்றன என்றால் மிகையாகாது. மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் விளைவிக்கின்ற வழிபாட்டு முறைகள் புதுப் புது வகைகளில் தோன்றக் காரணம் ஆகின்றன. அந்த எதிர்பார்ப்பின் விளைவே இராகுகால பூஜை ஆகும். செவ்வாய்க் கிழமை அன்று துர்க்கைக்குச் செய்யப்படும் இராகு கால பூஜை உடனடி பலன் கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். இராகு காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தமிழ் நாட்டில் எவரும் செய்வதில்லை. ஆனால், பிற மாநில மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இராகு காலத்தில் திருமணம் கூட செய்கிறார்கள்.

எல்லா இராசிகளுக்குமான இராகுவுக்கான பொதுவான பரிகாரங்கள்: செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிவன் கோவில் பிரார்த்தனை நல்லது. திருநாகேஸ்வரம், சங்கரன் கோவில் ஆகிய திருத்தல வழிபாடுகள் சிறப்பு. புற்று உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் எலுமிச்சை விளக்கேற்றி, பால், முட்டை வைத்தல் நல்லது. இராகு காயத்ரி பாராயணம் செய்க. மேற்கூறிய பரிகாரங்களை இராகுவுக்குச் செய்வது நலம் பயக்கும்.

எல்லா இராசிகளுக்குமான இராகுவுக்கான பொதுவான பரிகாரங்கள்:

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிவன் கோவில் பிரார்த்தனை நல்லது. திருநாகேஸ்வரம், சங்கரன் கோவில் ஆகிய திருத்தல வழிபாடுகள் சிறப்பு. புற்று உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் எலுமிச்சை விளக்கேற்றி, பால், முட்டை வைத்தல் நல்லது. இராகு காயத்ரி பாராயணம் செய்க. மேற்கூறிய பரிகாரங்களை இராகுவுக்குச் செய்வது நலம் பயக்கும்.
எல்லா இராசிகளுக்குமான கேதுவுக்கான பொதுவான பரிகாரங்கள்:

ஞாயிறு தோறும் அருகம் புல் மாலை சாத்தி கணபதி வழிபாடு. சனி தோறும் பெருமாள் கோவிலில் துளசி மாலை சாத்தி பிரார்த்தனை செய்தல். அதே நாள் – ஹனுமனுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல் ஒருமுறையேனும் கீழப்பெரும்பள்ளம் சென்று வருதல் ஆகிய பரிகாரங்கள் கேதுவுக்குச் செய்வது நலம் பயக்கும்.

இனி 12 ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம்.

மேஷம்: மேஷம் ராசி நண்பர்களே இதுவரை சிம்மம் ராசியில் இருந்த ராகு, கடகம் ராசியில் பகை நிலை பெற்று கல்வி வியாபாரம் தாய் நிலம் வீடு வாகன வசதி சொத்து சுகம் என்ற ஸ்தான பலனை தருவார். பொதுவாக ராகு கடகம் ராசியில் பகை பலம் பெற்றாலும் கடக ராகு நற்பலன்களை அதிகப் படுத்துவார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு ஏமாற்றங்கள் கஷ்ட நஷ்டங்கள் மறையும் நினைத்த காரியங்கள் கைகூடும் செய்கிற தொழில் வளர்ச்சி பெறும் உத்தியோகத்தில் முன்னேற்றம் பதவி உயர்வு இடமாற்றம் ஏற்படும் வீடு, வாகனம் வாங்க கூடிய சூழ்நிலை ஏற்படும். தொழில் முயற்சிகள் முயற்சிகள் கைகூடும். பூர்விக சொத்தில் இருந்து வங்த வில்லங்கங்கள் நீங்கும். இதுவரை இருந்த உடல் உபாதைகள், வீண் விரையம் வைத்திய செலவுகள் குறையும். சந்திரதிசை கேதுபுத்தி ராகு புத்தி நடப்பவர்கள் தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு வரலாம்.

கேதுபகவான் ஜீவன ஸ்தானத்திற்கு வருகிறார் தொழில் ஸ்தானத்தில் வருவதால் இதுவரை தொழில் வகையில் இருந்து வந்த நெருக்கடி கஷ்டநஷ்டங்கள் நீங்கும். எடுத்த காரியத்தை முடிப்பீர்கள் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும் புது வேலை தொழில்கள் கைகூடும்..திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் நடக்கும்.குழந்தை பாக்கியம் கிட்டும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். இருந்தாலும் யாருக்கும் ஜாமின் போடாதீர்கள். சூரிய திசையில் ராகு அல்லது கேது புத்தி நடப்பவர்கள் தந்தை உறவிலும் உடல் நலத்திலும் கவனம் தேவை. நல்லபெயர் எடுக்கிறேன் என்று தேவையற்ற வேலையில் இறங்கி கெட்ட பெயரை எடுக்க வேண்டாம். உங்களை வைத்து சம்பாதித்தவர்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். தாங்கள் ஜீவன வகையில் முன்னுக்கு வரும் காலம் ஆரம்பமாகிவிட்டது. திருக்கோயில் புனித யாத்திரைகள் செல்வீர்கள். குடும்பத்தில் அமைதி சந்தோஷம் நிலவும்.

ரிஷபம்: ரிஷபம் ராசி நண்பர்களுக்கு ராகு – கேது பெயர்ச்சி ஆனது தங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்துக்கு ராகுவும் 9 ஆம் இடத்துக்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். ராசிக்கு 3, 6, 11ல் ராகு கேது வருவது நல்லது ஆகும். மூன்றாம் இடம் என்பது தைரியம், வீரம், போகம், துணிவு, பலம் வெற்றியை குறிக்கும் பாவமாகும் தற்சமயம் கோசாரத்தில் கண்டக சனி அறிவாளியையும் முட்டாளாக்கி முடக்கிய காலம் மாறி நல்ல பலனை கொடுக்கும். இன்று கிடைக்கும் நாளை நடக்கும் என்று தடை தாமத நிலை மாறி புது முயற்சிகள் கை கூடும் தொழிலில் முன்னேற்றத்தை தரும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். வாங்கிய கடன்கள் அடைபடும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த கோர்ட் வழக்குகள் சாதகமாக தீர்ப்பாகும். வீடு மனை வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். திருமண சுபகாரியம் கை கூடும் நிண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துகள் கிடைக்கும்.

கேது பகவான் 9 ஆம் வீடான தந்தை குரு தெய்வம் பிராயாணம் அதிர்ஷ்டம் ஆகிய ஸ்தானத்துக்கு வருவதால் வெளிநாட்டு வேலைப்புகள், புதிய தொழில் மாற்றங்கள் தந்தையால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகமாகும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கூட்டு தொழில் சிலருக்கு சிக்கலை தரலாம். யாரையும் நம்பி தொழிலில் இறங்க வேண்டாம். இது நாள் வரை வாட்டிய கடன்தொல்லைகள் நோய் நொடிகள் நீங்கும். சந்திரன் தசையில் ராகு அல்லது கேது புக்தி நடப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

மிதுனம்: மிதுனம் ராசி நண்பர்களுக்கு ராகு பகவான் இரண்டாம் வீடான தனம் குடும்பம் வாக்கு சொத்து கண் பார்வை பேச்சு ஆகியவற்றை குறிப்பிடக்கூடிய காரக இடத்துக்கு வருகிறார் ஏற்கனவே இருந்த மூன்றாமிடம் நல்ல இடமானலும் பகை வீட்டில் அமர்ந்தால் சோதனைமேல் சோதனை தான் பலநெருக்கடிகளை கொடுத்து நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது. தற்பொழுது மாறி உள்ள இடம் நல்ல இடம் இல்லையன்றாலும் மனதில் நம்பிக்கையுடன் செயல்பட்டு பல காரியங்களை சாதிக்கலாம். தொழில் உத்தியோகத்திலும் குடும்பத்திலும் இருந்த நெருக்கடிகளும் தொல்லைகளும் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கக் கூடிய யோகத்தை கொடுக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். புது முயற்சிகள் கை கூடும் வெளிநாட்டு வேலை அமையும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். ராகு திசை சந்திரதிசை நடப்பவர்கள் எதிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

கேது 8 ஆம் வீடான வாழ்நாள் ஆழ்மனது சிந்தனை புதிய முயற்சி துக்கம் மர்மஸ்தானமான காரகங்களுக்கு கேது பகவான் வருகிறார். எதிலும் எச்சரிக்கை ஆக நடந்து கொள்ள வேண்டும்.ஓரு வார்த்தை வெல்லும் ஓரு வார்த்தை கொல்லும் என்பதன் அடிப்படையில் வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவுகள் அதிகமாக வந்தாலும் செலவுகள் கூடும் சேர்த்து வைத்த சேமிப்பு கரையும். பொருட்கள் களவு போகக் கூடும் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நட்பு வட்டங்கள் உற்றார் உறவினர் வகையில் பகை ஏற்படலாம். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும்.

கடகம்: கடகம் ராசி நண்பர்களே கடந்த ஓன்றறை ஆண்டுகளாக 2 ஆம் இடத்தில் ராகுவும் 8ஆம் இடத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தனர். தற்சமயம். ஜென்ம ராசிக்கு ராகு வருகிறார் இது வரை குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் தொழில் உத்தியோகத்தில் இருந்து வந்த டென்சன் நீங்கும் செய்கிற தொழில் உத்தியோகம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.உடல் ரீதியான பாதிப்பு நீங்கும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை அல்லது பிரமோசன் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரியம் நடைபெறும். சிலருக்கு எந்த காரியத்தை தொட்டாலும் காரியதடைகளை கொடுக்கும் அடிக்கடி மனஉளைச்சலை ஏற்படும் நட்பு உறவு மனமுறிவு ஏற்படலாம். வண்டி வாகனத்தில் கவனமாக செல்லவும்.

கேது பகவான் 7 ஆம் பாவமான வாழ்க்கை துணைவர் கூட்டாளிகள் கூட்டுத்தொழில் போக சுகம் ஆகிய ஸ்தானத்திற்கு வருவதால் மனைவியின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரகூடும்.வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் வரக்கூடும் எந்த காரியத்தை தொட்டாலும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். சிலருக்கு திருமண பாக்கியம் கை கூடும் கூட்டுத் தொழில் ஸ்தானத்தில் கேது வருவதால் கூட்டாளிகளால் தொழிலில் நஷ்டம் வரகூடும் புதுமுயற்சிகள் எடுக்க கூடாது. நண்பர்களுடன் பகை வரக்கூடும். சதா சர்வ காலமும் படபடப்பு டென்சன் ஆகியவற்றுடன் வாழும் நிலை உண்டாகலாம்.

சிம்மம்: சிம்மம் ராசி நண்பர்களுக்கு ராகு பகவான் 12 ஆம் வீடான செலவுகள் அயன சயன சுகபோகம் விரயம் ஆகிய காரகங்களை குறிப்பிடும் ஸ்தானத்திற்கு மாறுகிறார். ஜென்ம ராசியில் ராகு ராகுவிற்கு சனிபார்வை பாம்பின் வாயில் அகப்பட்ட தேரைபோல வாழ்க்கையில் பலவித சோதனை வேதனைகள் கடன் நோய் தேவையில்லாத அவமானம் ஆகியவற்றை அனுபவித்த தாங்களுக்கு இனி சற்றே ஆறுதல் கிடைக்கும் சனி பெயர்ச்சிக்குப் பின் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடலாம். இது வரை இருந்த வீண் விரயங்களை சுபவிரயமாக மாற்றுவார் ராகு பகவான் நீண்டா நாட்களாக வர வேண்டிய பாக்கிகள் வரும் கொடுக்க வேண்டியதை கொடுக்கலாம்.தொழில் உத்தியோகத்தில் சற்றே முன்னேற்றத்தை தரும். குடும்ப சூழ்நிலை மனநிறைவை தரும் கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். பிரிந்த உறவினர்கள் ஓன்று கூடுவார்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடன் வாங்க நேரிடலாம். ராசிக்கு 2ல் குரு கல்யாணம் நடக்கும் வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

கேதுபகவான் ராசிக்கு 7ம் இடத்திலிருந்து 6 ஆம் இடத்திற்கு மாறுகிறார் எதிரி கடன்கள் நோய்கள் துன்பம் பயம் நோய்கள் காரகங்களை குறிப்பிடும் ஸ்தானத்திற்கு மாறுவதால் மேலே சொல்லபட்ட எல்லா துன்பங்களையும் நீக்குவார். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் சிலருக்கு கோர்ட் கேஸ் வழக்குகள் சாதகமாகும் கேது நன்மைகள் அள்ளி வழங்குவார்.

கன்னி: கன்னிராசி நண்பர்களே தங்கள் ராசிக்கு இது வரை 12 ஆம் இடத்தில் ராகுவும் 6 ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சரித்தனர் செலவுகளால் பாடாய் படுத்திய ராகு லாபஸ்தானமான மூத்த சகோதரம் செல்வ லாபம் ஆகிய காரகங்களை குறிப்பிடும் ஸ்தானத்திற்கு ராகு வருகிறார். பொருளாதார வகையில் பலவித மாற்றங்களை சந்திக்கலாம். படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு படித்த படிப்புக்கு உண்டான வேலை அமையும். தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் அரசாங்க ஊழியர்களுக்கு தாங்கள் விரும்பிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். வாங்கிய கடனுக்காக வீடு மனை விற்க நினைத்து அதற்கு சரியான விலை கிடைக்காமல் தவித்தவர்களுக்கு நல்ல விலைக்கு விற்று பணமாக்கி எல்லா கடன்களும் அடைபடும் சிலருக்கு வெளிநாட்டு தொழில் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருமணம் சுபகாரியம் குழந்தை பாக்கியம் திருக்கோயில் தரிசனம் கிடைக்கும் புதுமுயற்சிகள் கைகூடும்.

கேது பகவான் பூர்வபுண்ணியம் கற்பனை வளம் புதியதை உருவாக்கும் திறன் மனம் புத்தி சிந்தனை ஆகிய காரகங்களை குறிப்பிடும் 5 ஆம் பாவத்திற்கு கேது வருகிறார் இதுவரை கணவன் மனைவி இடையே இருந்த மன வேற்றுமை நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும் எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். பணம் பல வழிகளில் வரும் தகப்பனார் வழியில் சொத்துபத்துகள் கிடைக்கும். சொந்த வீடுகட்டி புது வீட்டுக்கு குடிபோகலாம்

துலாம்: இது வரை தங்கள் ராசிக்கு 11ம் இடமான லாபஸ்தானத்தில் இருந்த ராகு ஜீவனம் செய்தொழில் வியாபரம் அந்தஸ்து அதிகாரம் புகழ் ஆகியவற்றை குறிப்பிடும் ஜீவன ஸ்தானத்திற்க்கு வருகிறார். ஏற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடம்தான் பகை வீட்டில் அமர்ந்தால் நன்மையை குறைவாக செய்த ராகு பத்தாம் இடம் வருவதால் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை தருவார். புதிய முயற்சிகள் கைகூடும் வேலை வாய்ப்பு மாற்றம் புது வேலை நல்ல வருமானம் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றத்தை தரும் துணிந்து செயல்படுவிர்கள் துன்பம் எப்பொழுதும் நிரந்தரம் இல்லை. கஷ்டநஷ்ட நிலைமாறும் சொந்த வீடு வாகனம் போன்றவை அமையும் குடும்பத்தில் அமைதி நிலவும் சுபகாரியம் நடக்கும் ஜென்மத்தில் குருவருவதால் எதையும் ஓருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள் அகல கால் வைத்தால் வில்லங்கத்தில் மாட்டி கொள்வீர்கள். கடகத்தில் சந்திரன் இருந்து அந்த ஸ்தானத்தில் ராகு வருவதால் தாய் வழியில் பிரச்சனைகள் வரக்கூடும். பிறப்பு ஜாதக தசா புத்தி பாதகமாக இருந்தால் நெருங்கிய உறவினர்கள் இறப்பதால் கருமம் செய்ய நேரிடும். வாங்கிய கடன்கள் அடைபடும் வட்டி சுமை குறையும்.

கேது பகவான் 4 ஆம் பாவ காரகமான கல்வி வியாபாரம் தாய் நிலம் வீடு வாகன வசதி சொத்து சுகம் ஆகியவற்றை கொடுக்கும் ஸ்தானத்திற்கு கேது வருகிறார். படித்து வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். நிலம் வீடு தொடர்பான வில்லங்கம் நீங்கும். புதிதாக வீடு நிலம் வண்டி வாகனம் வாங்கலாம் பழைய வீட்டை மாற்றலாம். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும் வெளிநாட்டு வேலை கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் பிரச்சனைகள் வரலாம் கவனம் தேவை.

விருச்சிகம் விருச்சிக ராசி நண்பர்களுக்கு ராகுபகவான் 9 ஆம் இடமான. தந்தை குரு தெய்வம் வெளிநாட்டு பயணம் புனிதயாத்திரை அதிர்ஷ்டம் ஆகிய காரகங்களை குறிப்பிடும் ஸ்தானத்திற்கு மாறுகிறார். புதிய முயற்சிகள் கை கூடும். தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வாங்கிய கடன்கள் அடைபடும் இழந்ததை மீட்டு விடலாம். சிலருக்கு பிள்ளைகள் முலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை நடைபெறும். சண்டை சச்சரவுகள் சாதகமாகும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் நீங்கும். பாகப் பிரிவினை உண்டாகும். வேலை தேடுவோர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு தொழில் முயற்சிகள் கைகூடும்.

கேதுபகவான் தைரியம் சகோதரம் வீரம் போகம் துணிவு துணைவர் பலம் வெற்றி ஆகிய காரக ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீண்ட நாள் நோய்களால் உண்டான தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு திருமணம் சுபகாரியம் கை கூடும். எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றி கிடைக்கும். .ஏழரை சனியால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் குறையும். பணம் முதலீடு போடாத தொழில்கள் கமிஷன் தரகு ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களால் வருமானம் அதிகரிக்கும் .மொத்தத்தில் சோதனைகள் எல்லாம் விலகிவிடும்.

தொடரும் ….!

பகிரவும்...
0Shares