ராகுல் காந்தி மன்னிப்பு கோரவேண்டும்: நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ராகுல்காந்தி அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நாட்டைத் தவறாக வழிநடத்தும் விதத்தில் நடந்து கொண்டதற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும். ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தமும் தரப்படவில்லை என ராகுல் கூறியது தவறு.

ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத்துறை பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும், ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளன” என நிர்மலா சீதாராமன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !