ராகுல் காந்தி தலைமையிலேயே ராமர் கோயில் கட்டப்படும் – ஹரிஷ் ராவத்

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பாஜகவினர் எப்போதுமே மற்றவர்களின் மாண்பைக் குலைப்பார்கள். மற்றவர்கள் மாண்பைச் சிதைப்பவர்கள் எப்படி ராமரின் பக்தராக இருக்க இயலும்.

நாங்கள் தான் அரசியல் சாசனத்தை மதிக்கத் தெரிந்தவர்கள். நாங்களே அடுத்தவர் மாண்பினை மதிப்பவர்கள். எனவே, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் தான் ராமர் கோயில் கட்டப்படும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது”2025-ல் ராமர் கோயிலைக் கட்டும் பணியைத் தொடங்கும்போது நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்.

1952-ல் சோம்நாத் கோயில் கட்டப்பட்ட பின்னரே தேசத்தின் வளர்ச்சி அதிகரித்தது. இப்போது ராமர் கோயிலைக் கட்டினால் அதே வேகத்தில் தேசம் வளர்ச்சி காணும். ராமர் கோயிலை மட்டும் கட்டுங்கள் நாட்டுக்கு அடுத்த 150 ஆண்டுகளுக்குத் தேவையான முதல் கிடைக்கும்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !