ராகுல் காந்தி கட்டளையிட்டால் தேர்தலில் போட்டி- நடிகை குஷ்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு துணை தலைவர் மயிலை அசோக்குமார், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பெயரில் விருப்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் இதனைக் கூறினார். இதுகுறித்து தெரிவித்த நடிகை குஷ்பு,  “நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எந்த முடிவும் செய்ய வில்லை. ராகுல் காந்தி என்ன சொல்கின்றாரோ அதை செய்வேன். ஒரு வேளை நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல் காந்தி கட்டளைவிட்டால் போட்டியிடுவேன்” எனக் கூறினார்.

இதேவேளை, இந்த தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என்று கடந்த ஒரு மாதமாகவே கருத்துக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !