ராகுல் காந்தியின் ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ருவிட்டர் நிறுவனம், அவரது கணக்கினை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாவது, முடக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியின் ருவிட்டர் பக்கத்தினை மீட்டெடுத்து, சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே, ராகுல் காந்தியை , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இதர சமூக ஊடகங்கள் வாயிலாக பின்தொடருங்கள் என அறிவித்துள்ளது
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரின் ஒளிப்படத்தை ராகுல் ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்தே அவருடைய ருவிட்டர் கணக்கை அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது.
பகிரவும்...