Main Menu

ரஷ்யாவுடனான உறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன அமைச்சர் அறிவிப்பு

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையேயான நட்புறவு இதுவரை இல்லாத அளவில் தற்போது மிகச்சிறப்பாக உள்ளதாக சீனாவின் கலாச்சாரத் துறை துணை அமைச்சர் ஷாங் ஷூ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கிடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

அந்த கூட்டத்தில் சீனாவின் கலாச்சாரத்துறை துணை அமைச்சர் ஷாங் ஷூ பங்கேற்று உரையாற்றிய போது “ரஷ்யா மற்றும் சீன நாடுகள் தற்போது சிறந்த அரச தலைவர்களை பெற்றுள்ளது.

ரஷ்ய -சீன உறவுகள் பல வருடங்களாக தொடர்ந்து நல்ல முறையில் நீடித்து வருகின்றது. முன்னைய ஒத்துழைப்புகளை விட தற்போது மிகச்சிறந்த நிலையில் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டுடன் ரஷ்யா தலைநகர் மொஸ்கோவிற்கும், பெய்ஜிங்கிற்குமான தூதரக உறவுகள் ஆரம்பித்து 70 ஆண்டுகள் ஆகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.