ரஷ்யாவில் விபத்து – ஏழு பேர் உயிரிழப்பு 30 இற்கும் மேற்பட்டவர்கள் காயம்!

ரஷ்யாவில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து 200 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள Kaluga பகுதியில் பேருந்து ஒன்று குடைசாய்தமையினாலேயே இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் 48 இற்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரில் நான்கு சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !