ரஷ்யாவில் கலைக்கூடத்தில் ஓவியம் திருட்டு

ரஷ்யா நாட்டின் புகழ்மிக்க கலைக்கூடங்களில் ஒன்று மாஸ்கோ பகுதியில் உள்ளது. இக்கலைக்கூடத்தில், பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் வருகை தந்து, இங்குள்ள சிறப்பு வாய்ந்த ஓவியங்களை பார்வையிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில்,  நேற்று காலையில், பார்வையாளர்கள் பலர் முன்னிலையில் புகழ்மிக்க ஓவியம் ஒன்று திருடப்பட்டுள்ளது. கலைக்கூடத்தில் ஏராளமான மக்கள் இருந்தபோதும் இச்சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் விசாரணையில், ஓவியத்தை திருடி சென்றவர் , அந்த கலைக்கூடத்தில் பணிபுரியும் ஊழியர் போல் தென்பட்டதாகவும், அவர் பதற்றம் ஏதும் இன்றி ஓவியத்தை எடுத்து சென்றதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நபரை ரஷ்ய போலீசார்  சிசிடிவி மூலம் அடையாளம் கண்டனர். இதனையடுத்து ஓவியத்தினை கைப்பற்றி அவரை கைது செய்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !