ரஷ்யாவில் கலந்துரையாடல் ஒன்றை மேற் கொண்டு நாடு திரும்பியது அரசாங்கத்தின் உயர் மட்டக் குழு

இலங்கையின் அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு ஒன்று ரஷ்யாவில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளது.

இராணுவ தளபாடங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

அதாவது, போர் விமானங்கள், போர்க்கப்பல் மற்றும் ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது குறித்தே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.

இலங்கை பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் உள்ளிட்டோர் அடங்கிய குழுவே ரஷ்யா சென்றிருந்தது.

எனினும், குறித்த கலந்துரையாடலின் இறுதி முடிவுகள் குறித்த தகவல்கள் எவையும் உடனடியாக வெளியாகவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !