ரஷிய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை – மேலும் ஒரு நிறுவனம் கைகோர்ப்பு
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும். இதற்காக மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையுடனும், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலுடனும் (பிராக்) இணைந்து செயல்படும்.