ரஷிய அதிபர் புதினுக்கு அடுத்த மாதம் புதிய சிகிச்சை
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அடிக்கடி தகவல் வெளியானது. 70வயதான அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி ரஷிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் புதின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வார இறுதியில் புதின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு புதிய சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிகிச்சை வருகிற மார்ச் 5-ந்தேதி தொடங்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் புதினின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் பாதிக்கும். அவர் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.