ரயில் தண்டவாளத்தை ஒட்டகம் கடந்ததால் பிரான்சில் போக்குவரத்து தடை

வடமத்திய பிரான்சின் மெலுன் மற்றும் மொன்டாஜிஸ் நகரங்களை இணைக்கும் லைன் ஆர் ரயில் பாதையில் ஒட்டகம் ஒன்று கடந்து சென்றதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக தடைபட்டிருந்தன.

அந்த பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அபூர்வமான வகையில் ஒட்டகம் ஒன்று கடந்து சென்றதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

குறித்த ரயில் மொன்டாஜிஸ் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென வேகம் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டதால் தாம் அதிர்ச்சியுற்றதாக பயணி ஒருவர் தெரிவித்தார்.

சில மணி நேரங்கள் போக்குவரத்து தடை நீடித்த நிலையில், அதற்குள் பல பயணிகள் இந்த சம்பவத்தை ஔிப்படம் எடுத்துள்ளனர். ரயில் பாதையை ஒட்டகம் வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !