ரயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ரயில்களில் பொதிகளை எடுத்து செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரி அனுர பிரேம ரத்ண தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ரயில் நிலையங்களில் உட்பிரவேசிக்கும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதே போன்று ரயில் புறப்படுவதற்கு முன்னர் ரயில்களும் பரிசோதிக்கப்படுகிறது. பாதுகாப்பு நிலைமை திருப்திகரமாக இருந்தால் மாத்திரமே பயணிகள் ரயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இதே போன்று பயணிகளும் சுயமாக தமது பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தற்பொழுது முறையான வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இராணுவம் உள்ளிட்ட முப்படை மற்றும் பொலிஸாரிடம் இருந்து பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.