ரணில் ஒருவரே பிரதமர் பதவிக்கு தகுதியானவர்: ஐ.தே.க. குழுக் கூட்டத்தில் தீர்மானம்

மிக நீண்டகாலமாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவரே நாட்டின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஒருபோதும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு தனிநபரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக நாட்டின் அரசியலமைப்பை மீற முடியாது என்ற ஒருமித்த கருத்தையும் நேற்றைய கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !