ரஞ்சன் ராமநாயக்க கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.