ரஜினியின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பு

நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் திருமணம் இன்று (திங்கட்கிழமை) சென்னையிலுள்ள லீலா பலஸில் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

அந்தவகையில், இந்த திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர், இன்று செளந்தர்யா-விசாகன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அவருடன் தமிழக அமைச்சர்களும் குறித்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

முதல்வர் மற்றும் முக்கிய பிரபலங்களின் வருகையை முன்னிட்டு லீலா பலஸ் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !