ரஜினிகாந்தின் கட்சி தொடர்பில் விரைவில் முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகைக்குப் பின்னர், நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்று அவரது சகோதரன் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், ரஜினிகாந்தின் சகோதரன் சத்ய நாராயணராவ், கர்நாடக மாநில தலைவர் சந்திரகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் ரஜினிகாந்தின் சகோதரன் சத்யநாராயணராவ் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர், “ரஜினிகாந்த் பொங்கல் தினத்திற்குப் பிறகு கட்சி சம்பந்தமான முடிவுகளை அறிவிப்பார்” என கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !