யேமன் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

இருபத்தொரு குழந்தைகளின் உயிரை காவுகொண்ட சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படையினர் யேமனில் நடத்திய விமானத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக யுத்தத்தில் இடம்பெறும் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இது தொடர்பான விசாரணைகளுக்கும் ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா.வினால் வெளியிடப்பட்டுள்ள தற்போதைய தகவல்களுக்கு அமைய குறித்த தாக்குதலில் 21 சிறுவர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 60 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த 21 சிறுவர்களும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !