யூடியூப் பார்த்து சொந்த விமானம் தயாரித்த கார் மெக்கானிக்

நம்மில் பெரும்பாலானோர் யூடியூப் தளத்தை பொழுதுபோக்கு, அல்லது பிற தேவைகளை அறிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் இவர் விமானம் தயாரிப்பது சார்ந்த வீடியோக்களை அதிகம் பார்த்து வந்துள்ளார்.

அதிக ஆர்வம் கொண்ட கார் மெக்கானிக் விமானம் தயாரிப்பு சார்ந்து வீடியோக்களை பார்த்து, தானும் ஒரு விமானத்தை செய்ய வேண்டும் என முடிவு செய்தார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பயன்படுத்திய போர் விமானத்தை வாங்கி அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார்.

ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானத்தில் இருந்த பழைய கருவிகள் மற்றும் பொருட்களை உருக்கி அவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளார்.

 

விமானம் முழுக்க தயாரானதும் கடந்த மார்ச் மாதத்தில் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். வயல் வெளிக்கு அருகே அமைக்கப்பட்ட விமான தளத்தில் விமானத்தை நிறுத்தியிருந்தார். அந்த விமானத்தை 3 பேர் தள்ளி என்ஜினை இயங்க உதவினர்.

தன்னைப் பார்த்து யாரும் ஏளனமாக சிரித்து விடக் கூடாது என்பதற்காக இந்த விமானத்தை அவர் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தயாரித்தார். மேலும் இவர் ஒரு ஏழை விவசாயியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !