யு.இ.எப்.ஏ. நேசன்ஸ் லீக்: ரஷ்யா அணியை வீழ்த்தியது சுவீடன் அணி!

யு.இ.எப்.ஏ. நேசன்ஸ் லீக் கால்பந்து தொடரில், லீக் போட்டியொன்றில், சுவீடன் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

லீக் டீ, குழு இரண்டில் நடைபெற்ற இப்போட்டியில் சுவீடன் அணியும், ரஷ்யா அணியும் மோதிக்கொண்டன.

பிரண்ஸ் எரினா- சோல்னா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பமே சுவீPடன் அணியினர் ஆக்ரோஷமாக விளையாடினர். போட்டியின் 41ஆவது நிமிடத்தில் சுவீடன் அணியின் வீரரான விக்டர் லிண்டலோஃப், அணிக்காக முதல் கோலை பெற்றுக் கொடுத்து இரசிகர்களை இன்ப வெள்ளத்தினால் ஆழ்த்தினார்.

இதனையடுத்து, ரஷ்ய அணியினர் பதில் கோல் போட, கடுமையாக முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. இதனால் முற்பாதியில் சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி நேரத்தில், ரஷ்யா அணி வீரர்கள் சிறப்பாக செயற்பட்ட போதும், 72ஆவது நிமிடத்தில் அந்த வாய்ப்பு சுவீடன் அணிக்கு கிடைத்தது. அந்த கோலை மார்கஸ் பெர்க், அடிக்க சுவீடன் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

மேற்கொண்டு இரு அணிகளால் முயற்சித்தும் கோல் போட முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில் சுவீடன் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !