யுவான்டஸ் கால்பந்து கழகத்தில் இணையும் ரொனால்டோ

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ யுவான்டஸ் (Juventus ) கால்பந்து கழகத்தில் இணைகின்றார் என்பதனை ரியல் மட்ரிட் கழகம் உறுதி செய்துள்ளது. போர்த்துக்கல்லைச் சேர்ந்த 33 வயதான ரொனால்டோ கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து ஸ்பெயினின் ரியல் மட்ரிட்டிற் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்தநிலையில் ரொனால்டோ, ரியல் மட்ரிட் கழகத்திலிருந்து விலகி  இத்தாலியின் யுவான்டஸ் கழகத்துடன் இணைய பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.துற்போது இதனை உறுதிப்படுத்திய ரியல் மட்ரிட் அணி 103 மில்லியன் யூரோவினை கொடுக்க யுவான்டஸ் விருப்பம் தெரிவித்ததாகவும், ரியல் மட்ரிட் அதை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

ரொனால்டோ ரியல் மட்ரிட் அணிக்காக 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !