யுனெஸ்கோ பட்டியலில் பிரசித்தி பெற்ற இரண்டாவது நினைவு சின்னமாக தாஜ்மகால் தேர்வு

ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பானது உலகின் பல்வேறு புராதன நகரங்களையும், சின்னங்களையும் பார்வையிட்டு அவற்றை பழமை வாய்ந்த புராதன சின்னமாக அறிவித்து வருகிறது.
இந்நிலையில், உலகின் பாரம்பரியமிக்க , சிறந்த நினைவு சின்னங்களில் இந்தியாவின் பிரசித்தி பெற்ற தாஜ்மகாலுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆக்ராவில் மொகலாய மன்னன் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டியது தாஜ்மகால். பளிங்கு கல்லால் அழகிய கலையம்சத்துடன் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை ஒரு ஆண்டுக்கு 80 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து செல்கின்றனர்.
எனவேதான் உலகின் பாரம்பரியமிக்க, சிறந்த நினைவு சின்னங்களில் தாஜ்மகால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்தியாவின் அங்கோர்வாட் முதல் இடத்தில் உள்ளது  என தெரிவித்துள்ளனர்.
மேலும், சீனாவின் பெருஞ்சுவர், பெருவில் உள்ள மச்சு பிச்சு, பிரேசிலில் அமைந்துள்ள இகாசு தேசிய பூங்கா உள்பட பல்வேறு இடங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத்தை புராதன நகரமாக யுனெஸ்கோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !