யாழ்.பல்கலை மாணவர்கள் விடுதலை பரிசீலிக்கப்படும்
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை முழுமையாக விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக பதில் சட்டமா அதிபருடனான இன்றைய சந்திப்பு குறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு தொலைபேசி ஊடாக கருத்து வெளியிட்டபோதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தினை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.