தேசிய தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன் 65வது பிறந்தநாள் – யாழ். பல்கலை கழகத்தில் அனுஷ்டிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தேசிய தலைவா் பிரபாகரனின் 65-வது பிறந்த நாளை ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகள் பெரும் கெடுபிடிகளுக்கு இடையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தியவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
வவுனியாவில் ராணுவம் திடீரென வீடு வீடாக சோதனைகள் நடத்தி வருகின்றன. சாலைகளில் புதியதாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
யாழ். தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று மாவீரர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி. சரவணபவன் பங்கேற்றார். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65-வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராணுவ கெடுபிடிகளுக்கு இடையே யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
25,000 மாவீரர்கள் பெயர்களுடன் கல்வெட்டு

இதனிடையே தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த 25,000 மாவீரர்கள் பெயர்களை கொண்ட பிரம்மாண்ட கல்வெட்டு இன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட உள்ளது. இன்று மாலை இந்த கல்வெட்டு முன்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
*********************************************************************
65-வது பிறந்த நாள்- பிரபாகரன் வாழ்வே எங்களது கொள்கை சாசனம்: சீமான்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபகாரனுக்கு 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது வாழ்வே தங்களது கொள்கை சாசனம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ்த்தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக முகவரியாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் வே.பிரபாகரனின் 65 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன்.
அடிமைத்தனத்திற்கெதிரான உலகப்போராட்டக்களங்களில் எத்தனையோ நாயகர்கள் தோன்றி மண்ணையும், மக்களையும் காப்பாற்றுகிற வீரர்களாக வாழ்ந்துக் காட்டி மறைந்திருக்கிறார்கள். வரலாற்றின் வீதிகளில் வீழ்த்தப்பட்ட இனத்தின் அடிமை விலங்கினைத் தகர்க்க எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள்.
ஆகச் சிறந்த புனிதர்
ஆகச் சிறந்த புனிதர்
காலங்காலமாய்க் கண்ணீர் சிந்தும் மக்களின் வேதனையைப் போக்கி, மதிப்புறு வாழ்வு ஒன்றுக்காகத் தன் வாழ்வையே முன்னிறுத்திப் போராடிய எத்தனையோ அதிமனிதர்கள் இந்த அகிலத்தில் அவதரித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாவரையும் காட்டிலும் ஆகச்சிறந்த உதாரணத்தலைவனாக, எக்குறையும் சொல்ல இயலா மனிதப்புனிதராக பிரபாகரன் திகழ்ந்தார்கள்.
அறம் காத்த பிரபாகரன்
அறம் காத்த பிரபாகரன்
நம்மினத்தைக் கொன்றொழித்த சிங்களர்களால்கூடக் குற்றஞ்சாட்டவோ, களங்கம் கற்பிக்கவோ முடியாத அளவுக்குக் காவியங்களில் மட்டுமே நாம் பார்த்த ஓர் அதிஉன்னதப் புனித வாழ்வை நம் கண்முன்னே வாழ்ந்த வரலாற்று பெருநாயகன் பிரபாகரன். மறம் காட்டி நின்றாலும் இறுதிவரை களத்திலே அறம் போற்ற நின்றார் அவர்.
ஆறு படைகள் அமைத்தவர்
ஆறு படைகள் அமைத்தவர்
அடிமைத்தேசிய இனத்தின் விடுதலைக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து இந்தப் பூமிப்பந்தில் தமிழர்களுக்கென்று ஒரு தேசம் படைக்க, சிங்கள இனவாத அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களின் தாய் நிலத்தை மீட்டெடுக்கத் துப்பாக்கி ஏந்தி துணிந்து நின்றார். ‘விடுதலை என்பது விற்பனைப் பண்டம் அல்ல. அது உயிரையே விலையாகத் தந்து போராடிப் பெறுகிற புனித உரிமை’, என்பதைத் தெளிவாக உணர்ந்து, ‘உயிர் உன்னதமானது; ஆனால், அதனினும் உன்னதமானது எமது உரிமை; விடுதலை; கெளரவம்’ என வீரமுழக்கமிட்டு, உயிரை ஒரு குப்பியில் அடைத்து தன் கழுத்திலேயே தொங்கவிட்டு, விடுதலைத்தாகம் கொண்டு விண்ணுக்கும் மண்ணுக்குமாக, கடலுக்கும், கரைக்குமாக ஆறு படைகள் கட்டிக் களத்தில் பாய்ந்து, உலகமே ஒற்றை அணியில் தனக்கு எதிராய் நின்றாலும் அதனை எதிர்த்து உள்ளம் தளராது, தாய் மண்ணின் விடுதலைக்காகத் தன்னலமற்றுக் களத்தில் நின்ற ஒப்பற்ற மாவீரன் பிரபாகரன்.
போர் வெறியர் அல்லர்
போர் வெறியர் அல்லர்
உலகமே தனது வீரத்தைக் கொண்டாடினாலும் தன்னை ‘மாவீரன்’ என விளிக்க ஒருபோதும் அவர் விரும்பியதுமில்லை; அதனை அனுமதித்ததுமில்லை. களத்தில் வீரவிதைகளாக விழுந்த விடுதலைப்போராளிகளையே ‘மாவீரர்கள்’ என்றார். உலக வரலாற்றில் எந்நாட்டின் துணையுமில்லாமல், எவரது உதவியுமில்லாமல் தன் சொந்த நாட்டு மக்களையே ஒரு படையாகக் கட்டி, இராணுவமாகத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சியும், போர்த்திறனும் போதித்து உலக வல்லாதிக்கங்களை எதிர்த்து விடுதலைப்போர் புரிந்த உலகின் ஒரே புரட்சியாளர் பிரபாகரன் மட்டும்தான். அவர் ஆயுதங்கள் மீதும், இராணுவ பலத்தின் மீதும் தீரா காதல் வன்முறையாளரும் அல்லர்; போர்வெறியரும் அல்லர்.
தேசியத் தலைவன் பிரபாகரனின் அகவை அறுபத்தைந்து…
தலைவா தலைவா இன் றெமக்குத் திருநாளே – உலகில்
குனிந்த தமிழன் நிமிர்ந் தெழுந்தான் உன்னாலே
தலைவா தலைவா தமிழின் தேசியத் தலைவா
வேலுப்பிள்ளை பிரபாகரா
விடியலின் ஒளியே சூரியக் கதிரே
வாழிய வாழியவே
இன்றொரு சரித்திரம் வென்றெழுதி நின்றாய்
அன்பெனும் அறமும் அருளியே தந்தாய்
களமுனை போரில் அற நெறி நின்றே
ஆதித் தாயகம் வென்றே காத்தாய்
விடுதலை ஒளியே விசைப் புயல் கனலே
மறக்குலத் தோன்றலே வாழிய வாழியவே
மார்கழி குளிரில் பார்வதி மடியில்
மகவென உதித்த, வேலுப்பிள்ளை பிரபாகரனே
தமிழரின் தேசியத் தலைவனே வாழிய வாழியவே
இறைவன் ஒருவனை இதுவரை தேடினோம்
ஒருவனல்ல இருவரென உன்னையும் தேடுகிறோம்
இறப்பில்லை பிறப்பில்லை இனி உனக்கு
இன்னொரு பிறவியும் வேண்டாம் எதற்கு
உன் போல் ஆகுமோ அவன் பிறப்பு !
உன்னால் உயர்ந்தோம் உன்னால் வாழ்கிறோம்
தலைவா தலைவா இன்றுன் திருநாளே
அகிலம் போற்றும் அகவை அறுபத்தைந்து
ஆனந்த திரு நாளே
தேசியத் தலைவா தேடலின் இறையே
தமிழர் குலச் சாமியே தனிப் பெருந்தகையே
வங்கக் கடலும் வந்து வணங்கும்
நின் புகழ் பாடுகின்றோம்
வையகம் உய்திட நீ வாழிய வாழியவே
எங்கள் பிரபாகரனே வாழிய வாழியவே
பாவலர் வல்வை சுயேன்.