யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வாளாகம் படையினரால் சோதனை
யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகம் படையினரால் இன்று(16) சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. படையினரும் காவல்துறையினரும்; இணைந்து இச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்கலைகழக நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக இன்றைய நாள் படையினருக்கு சோதனை நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது 450 இராணுவத்தினர் மற்றும் 90 காவல்துறையினர்; இணைந்து இச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்தனர். இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.