யாழ் படையினரால் சாவகச்சேரி டிரீர்பெர்க் கல்லுாரிக்கு சுகாதார வசதிகள்..

யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 523ஆவது படைப்பிரிவிற்குரிய 12ஆவது கெமுனுஹேவா படையணி மற்றும் 4ஆவது விஜயபாகு காலாட்படை யணியினர் இந்த சுகாதார வசதிகளை வழங்கினார்கள்.

முன்னாள் யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கேரணல் கே.ஏ.ஏஉதயகுமார அவர்களின் வேண்டுகோளுக்கினங்க நியூயோர்க்கில் வசிக்கும் திருமதி ஓனிலி எஸ். ரணசிங்க அவர்களினால் ரூபா 300,000/=இலட்சம் நிதியுதவி இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

திருமதி ஓனிலி எஸ். ரணசிங்க அவர்களின் அன்பளிப்பிற்கமைய இம்மாதம் ஓகஸ்ட் 27ஆம் திகதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கழிவறை கட்டிடங்கள் பாடசாலை வளாகத்தில் திறந்துவைத்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கழிப்பறை வளாகத்தை கட்டியெழுப்பிய இராணுவ சேவையை பாராட்டி நன்கொடையாக இராணுவ அதிகாரிகளுக்கு டிசேட்டுகள் வழங்கினார்.

இந்நிகழ்விற்கு 523 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, 12ஆவது கெமுனுஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, 4ஆவது விஜயபாகு காலாட்படையின் கட்டளை அதிகாரி,சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி, 523 படைப்பிரிவினர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளிமாணவர்கள் கலந்து கொண்டனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !