யாழில் மிகவும் உணர்வுபூர்வமாக சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஆயிரமாயிரம் உயிர்களை காவுகொண்ட சுனாமி அனர்த்தத்தின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் உருவெடுத்த சுனாமி பேரலை, இலங்கையின் கரையோர பகுதிகளில் குறிப்பாக வடக்கு கிழக்கில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

அந்தவகையில், யாழ். மாவட்டத்தில் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. குறிப்பாக வடமராட்சி கிழக்கு – உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. உறவுகளை இழந்தவர்கள் கண்ணீர்மல்க தமது உறவுகளை நினைத்து இதன்போது அஞ்சலி செலுத்தினர்.

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !