Main Menu

யாழில் நல்லூர் கோயிலை பறைசாற்றும் பிரம்மாண்ட வளைவு – பணிகள் தீவிரம்

நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம், செம்மணியில் பிரம்மாண்டமான நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார். அந்த நிதிக்கு அமையவே இந்த வளைவு அமைக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

குறித்த வளைவு அமைப்பதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதுடன் கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையில் நல்லூர் வளைவில் சிற்பங்கள் நிறுவப்பட்டு மிக விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது.

பிற மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் மக்களை வரவேற்கும் யாழ். வளைவுக்கு அண்மையிலேயே குறித்த நல்லூர் வளைவு அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நல்லூர் வரவேற்பு வளைவு அமைக்கப்படுவதற்காக செம்மணி வீதியின் சில பகுதிகளுக்கான வாகனப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பகிரவும்...