யாழில் இளைஞர்கள் தனியார் பேருந்தை வழிமறித்து தாக்குதல்

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதிக்கு ஏழாலையூடாக பயணித்த தனியார் பயணிகள் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் குழு ஒன்று தாக்கியதன் காரணமாக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி சிதறி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தனியார் பேருந்து நடத்துனருடன், அந்தப் பிரதேச இளைஞர் ஒருவர் முரண்பட்டுள்ளார். இதனை அடுத்து முரண்பட்டவர் தனது குழுவினருடன் இணைந்து, மாலை 6.30 மணியளவில் பேருந்தை மறித்து நடத்துனரை தேடியுள்ளார்.

அவர் இல்லாத நிலையில் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி உள்ளதனால் கண்ணாடித்துகள்கள் பயணிகளை தாக்கியுள்ளன. இதனால் அச்சமடைந்நத பயணிகள் பதட்டத்துடன் சிதறி ஓடியுள்ளனர். இது குறித்து சாரதி சுன்ணாகம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டை அளித்துள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !