மோடி 14 ஆயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளார் – விஜய் மல்லையா
கடன் தொகையை விட அதிக மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துவிட்டதாக பிரதமர் மோடியே தெரிவித்த பின்பும், தம்மைக் கடன் வாங்கிவிட்டு ஓடிப்போனவன் என பா.ஜ.க. கூறுவது ஏன் என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்ச் 29 ஆம் திகதி மோடி அளித்த பேட்டி ஒன்றில், மல்லையா 9 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருந்தாலும், 14 ஆயிரம் கோடி மதிப்பிலான சர்வதேச சொத்துக்களை முடக்கியிருப்பதாக கூறியிருப்பதை, விஜய் மல்லையா தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாங்கிய கடனை விட அதிகமாகப் பறிமுதல் செய்துவிட்டதை அவரே ஒப்புக் கொண்ட பின்பும் பா.ஜ.க.வினர் தன்னை கடனை வாங்கிவிட்டு ஓடிப்போனவன் எனக் கூறுவதாக விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தான் 1992ம் ஆண்டில் இருந்து லண்டன் குடியுரிமை பெற்றவன் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
கிங்க் பிஷர் மதுபான நிறுவன நிறுவனர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தின் லண்டனுக்கு தப்பி ஓடியாமை குறிப்பிடத்தக்கது.