Main Menu

மோடியின் ருவிட்டர் தளம் மீது சைபர் தாக்குதல்!

பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் தளம் மீது  இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in  என்ற ட்விட்டர் பக்கத்தை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

குறித்த கணக்கு மீது அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிரிப்டோ கரன்சியை தாராளமாக நன்கொடை வழங்குமாறு போலிச் செய்தியொன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த ருவிட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் ருவிட்டர் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ருவிட்டர் செய்தித் தொடர்பாளர், ‘நாங்கள் நிலைமையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இந்த நேரத்தில் கூடுதல் கணக்குகள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரியாது. குறித்த கணக்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”  எனத் தெரிவத்துள்ளார்.

பகிரவும்...
0Shares