மோடியின் ஆட்சிக்கு எதிராக மாணவர் அமைப்புக்கள் போராட்டம்

மோடி அரசாங்கத்திற்கு எதிராக, இந்திய தலைநகர் புதுடெல்லியில் மாணவர் அமைப்புக்களினால் மாபெரும் எதிர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

சிறந்த கல்வியையும், வேலை வாய்ப்பினையும் வழங்கக் கோரி இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் அதிகரித்துள்ளன.

அந்தவகையில், நேற்று (வியாழக்கிழமை) மோடி அரசாங்கத்திற்கு எதிராக, இந்திய தலைநகர் புதுடெல்லியில் மாணவர் அமைப்புக்களினால் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மாணவ அமைப்புக்கள் இணைந்து உருவாக்கிய ”இளம் இந்தியா தேசிய ஒருங்கிணைப்பு” என்ற அமைப்பினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

செங்கோட்டையிலிருந்து, நாடாளுமன்ற வளாகம் வரை பேரணியாகச் சென்ற மாணவர்கள், நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவரொருவர் குறிப்பிடுகையில், 2014 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய மோடி, ஒவ்வொரு வருடமும், 20 மில்லியன் வேலை வாய்ப்பு வழங்கப்படுமென உறுதியளித்த போதிலும், ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையில், அது நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம் சுமத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட பலர் பங்கேற்று மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !