மோசமான பருவநிலை மாற்றம் – 62 மில்லியன் பேர் பாதிப்பு!
மோசமான பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு 62 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மில்லியன் பேர் பருவநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப யுகம் தொடங்கியதிலிருந்து இதுவரை பூமியின் வெப்பநிலை சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருங்கடல்களின் வெப்பநிலை கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வெப்பவாயுக்களால் ஏற்படும் வெப்பத்தில் 93 சதவீதம் கடலுடன் இணைகின்றமை காரணமாக, கடல் மட்டம் வெகுவிரைவாக உயர்வடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவு சென்ற ஆண்டு உச்சத்தை எட்டியது தற்போதைய நிலைக்கு முக்கியக் காரணம் எனவும் ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பகிரவும்...