“மொழியியல் விருது” பேராசிரியர் ச.சச்சிதானந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டது

தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ்ச் சங்கம் வருடாவருடம் வழங்கி வரும், இலக்கியம் இலக்கணம் மற்றும் மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலக தமிழ் அறிஞர்களுக்கான விருதுகளில், 2018 ம் ஆண்டு உலக தமிழ் சங்க மொழியியல் விருது, ஈழத்து பேராசிரியர் ச.சச்சிதானந்தம் M.A,D.S,Ph.D (சச்சி தமிழர் பாடசாலை இயக்குனர் பிரான்ஸ், TRT தமிழ் ஒலி  உதவுவோமா நிகழ்ச்சி ) அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் இன்று (பெப்ரவரி 19) வழங்கி வைக்கப்பட்டது.

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். அதன்படி இந்த விருதுகள் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 19) தலைமைச் செயலகத்தில் அளிக்கப்பட்டன.

இவற்றில் 2018-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டின் ஜீவகுமாரன் அவர்களுக்கும், இலக்கண விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசன் அவர்களுக்கும் , மொழியியல் விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ச.சச்சிதானந்தம் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டன.

இந்த விருதுகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், தகுதியுரை, பொன்னாடை அளிக்கப்பட்டன.

தமிழ்த்தாய் விருது சிலம்பொலி செல்லப்பன் விருது , கணினி தமிழ் விருது, தமிழ்த்தாய் விருது, சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் விருது, தமிழ்ச் சங்க விருதுகள் என்பன அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பு பட்ட செய்தி (இணைப்பு 1)

தமிழக அரசின் விருது – ஈழத்து பேராசிரியர் ச.சச்சிதானந்தம் அவர்கள் தேர்வு

தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ்ச் சங்கம் வருடாவருடம் வழங்கி வரும் இலக்கியம் இலக்கணம் மற்றும் மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலக தமிழ் அறிஞர்களுக்கான 2018 ம் ஆண்டு உலக தமிழ் சங்க மொழியியல் விருதிற்கு ஈழத்து பேராசிரியர் ச.சச்சிதானந்தம் அவர்கள் M.A,D.S,Ph.D (சச்சி தமிழர் பாடசாலை இயக்குனர்,பிரான்ஸ்) தேர்வு செய்யப்பட்டதாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 19/02/2019 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பேராசிரியர்.ச. சச்சிதானந்தம் அவர்களின் சர்வதேச உயர் கல்வி நிறுவனம் (Institut International des Etudes Supérieures) கடந்த 18 ஆண்டுகளாக ஐரோப்பியத் தமிழர்களுக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகப் பீ.ஏ., எம்.ஏ.பட்டதாரிகளை உருவாக்கி, பலதுறைகளில் பட்டப் படிப்புக்களை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே .

அத்துடன் பிரான்சில் பட்டப் படிப்புகளை வழங்கும் வகையில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகமும் பிரான்ஸ் பன்னாட்டு கல்வி நிறுவனமும் இணைந்து கல்வி மற்றும் பண்பாட்டு பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் பட்டயபடிப்புகளை அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்களின் சீரிய தமிழ் பணிகளுக்கான அங்கீகாரமாக இவ்விருதினை கருதி எமது சிறப்பான வாழ்த்துக்களை பேராசிரியர் அவர்களுக்கு தெரிவிப்பதில் ஐரோப்பிய முதல் 24 மணி நேர தமிழ் வானொலியான TRT தமிழ் ஒலி (பிரான்ஸ்) சார்பில் பெருமை கொள்கிறோம்.

மென்மேலும் பல விருதுகளை பெற்று தமிழுக்கும் ஈழத்து புலம் பெயர் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்தி நிற்கின்றோம்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !