Main Menu

மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது – ஜனாதிபதி

மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இதனை கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அனைத்து இன, மத பிரிவினர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக மக்கள் பிளவுபடுவதை தடுக்க முடியும்.
மொழியை அடிப்படையாக்கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தும் நடவடிக்கைகளும் நிறைவுசெய்ய வேண்டியுள்ளது. எனவே, தனது எண்ணக்கருவிற்கமைய பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட மும்மொழி தேசிய பாடசாலை வேலைத்திட்டத்தை போன்ற திட்டங்கள், இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

பகிரவும்...