மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்காலத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் தாமரை மொட்டுச் சின்னம் என்றாலும் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து உருவாக்கும் விரிவான கூட்டணியின் கட்சித் தலைவர்கள் மற்றும் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் போட்டியிடும் சின்னம் தீர்மானிக்கப்படும்.

எவ்வாறாயினும் சின்னமோ, நபரே முக்கியமல்ல. வேலைத்திட்டம் என்பதால், நபரை சுற்றி அல்லாமல் உரிய வேலைத்திட்டத்தின் கீழ் விரிவான கூட்டணி உருவாக்கப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்காலத்தில் நடைபெறும் எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும்” என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !