Main Menu

மைத்திரியை நோக்கிய தமிழ் பெண்ணின் கவிதை;

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கிலிருந்து ஒரு தந்தையை பறிகொடுத்த சிறுமியின் கவிதை பலரையும் அதிர வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

அந்த பெண்ணின் கவிதையில்

ஜனாதிபதி அங்கிள்!

🎀நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார்.

🎀நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்று சம்பந்தர் தாத்தா கூறுகின்றார்.

🎀உங்களை கொல்ல வந்தவரையே நீங்கள் மன்னித்து விடுதலை செய்ததாக பத்திரிகை மாமாக்கள் கூறுகின்றனர்.

🎀அதுமட்டுமன்றி நீங்கள் உங்கள் வீட்டு சாப்பாட்டை உங்கள் கையாலே சாப்பிடுகின்றீர்களாம்.

🎀உங்கள் கைகால்களை உங்கள் கையால் கழுவுவதைக்கூட பெருமையாக சொல்லுவார்கள் போல் இருக்கு.

🎀இந்தளவு நல்லவாரன, எளிமையானவரான, அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் என் அப்பாவை மட்டும் எனக்கு காட்ட மறுக்கின்றீர்கள்?

🎀நான் பிறந்தது முதல் என் அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை. நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோது அப்பாவை ராணுவம் பிடித்து சென்றதாக அம்மா கூறுகின்றா.

🎀சம்பந்தர் தாத்தாவின் மகள் அவருடன் கூட இருந்து ஒவ்வொரு நாளும் தன் தந்தையை பார்க்கிறார்.

🎀சுமந்திரன் மாமாவின் பிள்ளைகள் அவருடன் ஒன்றாக கூட திரிந்து மகிழ்கிறார்கள்.

🎀மாவை சேனாதிராசா மாமா தன் பிள்ளைகளை லண்டனில் சந்தோசமாக வைத்திருக்கின்றார்.

சரவணபவன் மாமாவின் மகள் பிறந்தநாளுக்கு நீங்களே வந்து கேக் ஊட்டுகின்றீர்கள்.

🎀சிறீதரன் மாமா தன் பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் வைத்து படிப்பிக்கின்றார்.

🎀நானும் அவர்களது பிள்ளைகள் போல் என் அப்பாவுடன் சேர்ந்து இருக்க விரும்புகிறேன்.

🎀நானும் என் அப்பாவின் கை பிடித்து பாடசாலை செல்ல விரும்புகிறேன்.
நானும் அப்பாவின் முதுகில் எறி உப்பு மூட்டை விளையாட்டு விளையாட விரும்புகிறேன்.

என் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா மாமா?

நான் என்ன தவறு செய்தேன். எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை?

தமிழ் இனத்தில் பிறந்தது என் குற்றமா?

பகிரவும்...
0Shares