மைக் பொம்பியோவின் கருத்திற்கு பதிலளித்தார் சவேந்திர சில்வா
அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையில் வைத்து விடுத்த அறிவிப்பு நடைமுறைக்குவரும் என நம்புவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் கடந்த 28ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
இதன்போது இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள பயணத் தடை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என்ற அறிவிப்பை அவர் விடுத்திருந்தார்.
இந்தநிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அமெரிக்கா என்பது பலம்பொருந்திய நாடு, இராஜாங்கச் செயலாளர் பதவியை வகிப்பவரும் பலம் பொருந்திய நபராகவே கருதப்படுவார்.
எனவே, அப்படியான ஒருவர் வழங்கிய அறிவிப்பு தொடர்பில் சாதகமான பெறுபேறு கிடைக்கும் என நேர்கோணத்தில் சிந்திப்போம். அது எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பிலும் நல்லதாகவே யோசிப்போம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...