மைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்!

மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நேற்று (திங்கட்கிழமை) மாலை காலமானதாக அவருடைய சகோதரி ஜொடி உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்த நிணநீர்த் தொகுதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுவந்ததாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன், அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் அவருக்கு பல ஆண்டுகளாக நம்பிக்கையூட்டும் விதத்திலேயே மருத்துவத்தை மேற்கொண்ட போதிலும் நேற்று புற்றுநோயினால் மிகவும் அவதியுற்று மரணித்துள்ளார்.

ஒரு வியாபாரியாக தனது சகோதரன் ஒவ்வொரு கட்டங்களிலும் தனித்துவமான வெற்றியை சுவீகரித்துள்ளதாக அவருடைய சகோதரி ஜொடி மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மிகப் பழைய அன்பான நண்பனும் ஒரு நல்ல மனிதருமான பவுள் எலனை இழந்ததை இட்டு மிகவும் மனமுடைந்து போயுள்ளதாகவும் இனிமேல் பவுளின்றி மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட கணணித் தொழிற்பாட்டை முன்னெடுப்பது இலகுவானதல்ல என்றும் மைக்ரோ சொஃப்ட்டின் இணைப்பங்காளர் பில் கேட்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறந்த கொடையாளியாகவும் விளங்கிய பவுள் எலன், பில் கேட்ஸினுடைய பால்யகால நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்திற்கு மட்டுமன்றி இவர்,  NBA’s Portland Trail Blazers, the NFL’s Seattle Seahawks ஆகியவற்றின் உரிமையாளருமாவார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !